குடிநீருக்காக பொதுமக்கள் அலையக்கூடாது - அதிகாரிகளை எச்சரித்த ஓபிஎஸ்…

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
குடிநீருக்காக பொதுமக்கள் அலையக்கூடாது - அதிகாரிகளை எச்சரித்த ஓபிஎஸ்…

சுருக்கம்

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முதலமைச்சர் ஓபிஎஸ் அதிக அக்கறை காட்டி வருகிறார். அதனால், அரசு ஒதுக்கும் நிதியை, குடிநீர் வினியோகத்திற்கு அதிகம் 

செலவிடுங்கள் என்றும்தேவையின்றி வேறு பணிகளுக்கு ஒதுக்கி நிதியை வீணடிக்க வேண்டாம

என்றும் அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது

வடகிழக்கு பருவ மழைதான். ஆனால்  இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட, 6

2 சதவீதம் குறைவாகவே பெய்தது. 



இதனால்,தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீரும், அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. 

இப்போதே தமிழகத்தின் பல பகுதிகளில், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஓரிரு மாதங்களில், குறிப்பாக கோடையில், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், 

குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை அறிந்த, ஓபிஎஸ் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், அதிக அக்கறை காட்டிவருகிறார்.

தமிழகம் முழுவதும், குடிநீர்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், 

பழைய கிணறுகளை துார் வாருதல், விசைப்பம்புகளை கூடுதலாக நிறுவுதல், லாரிகள் மூலம் குடிநீர்வழங்குதல் 

போன்ற பணிகளுக்காக, அண்மையில் 894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும்

ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

குடிநீருக்காக மக்கள் போராடக்கூடிய சூழ்நிலை வந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் ஓபிஎஸ் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,

ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவை கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக சந்தித்து

அதைப் பெற்றுவந்தது அவருக்கு அதிகாரிகளிடையே  நல்ல மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ஓபிஎஸ் எடுத்துவரும்

நடவடிக்கைகள் அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?