
மாட்டிறைச்சி விவகாரம் அவரவர் தனிப்பட்ட பிரச்சனை இதில் யாரையும் கட்டுபடுத்த கூடாது என்று ஓபிஎஸ் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி விவகாரம் இந்தியா முழுவதும் எதிரொலித்த வருகிறது உணவு உண்ணும் விசயத்தில் இதை உண்ணலாம் இதை உண்ணக்கூடாது என்று கட்டுப்படுத்தும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எதிர்கட்சி தலைவர்கள் பல மாநில அரசுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், தேமுதிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இன்னும் மழுப்பலான பதிலையே தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் ஆதரவு நிலையில் எடப்பாடி அரசுக்கு இணையாக ஆதரவு தெரிவது வரும் ஓ.பன்னீர்செல்வம் மாட்டிறைச்சி விவகாரத்தில் துணிந்து எதிர்கருத்து தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு “நான் இதுவரை அசைவம் சாப்பிட்டு வந்தேன். பின்னர் அதை விட்டு விட்டேன் அதே போன்று ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்ன சாப்பிட கூடாது என்று யாரும் நிர்பந்திக்க முடியாது உணவு விசயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர கூடாது” என்று பாஜகவுக்கு எதிராக கருது தெரிவித்துள்ளார்.