
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து 6ம் தேதி அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேவேளையில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
இதைதொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போயஸ் கார்டனில் நடந்து வந்தது. கூட்டத்தின் முடிவில் அதிமுக பொது செயலாளராக வி.கே.ச்சிகலா பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையொட்டி நேற்று காலை அனைத்து அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் 4 பஸ்களில் அழைத்து வந்து நேற்று மதியம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து அமைச்சர்களும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றனர். அங்கு அவரது சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.