நிர்வாகிகளுடன் ஒபிஎஸ் அவசர ஆலோசனை.. - மறுபடியும் முதல்ல இருந்தா...?

Asianet News Tamil  
Published : Aug 19, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
நிர்வாகிகளுடன் ஒபிஎஸ் அவசர ஆலோசனை.. - மறுபடியும் முதல்ல இருந்தா...?

சுருக்கம்

ops meeting with supporters

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமது நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

இதில், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பொன்னையன், சுந்தரம், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார். 

அதனால் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது. 

நேற்று மாலை 7.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது.

ஆனால் அவர்கள் வராததைகண்டு காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து செல்கின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்த எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகளும் புறப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமது நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

இதில், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பொன்னையன், சுந்தரம், செம்மலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இதையறிந்த அதிமுக தொண்டர்கள் மீண்டும் முதல்ல இருந்தா என வடிவேலு பாணியில் காமெடி அடித்து சென்றனர். 

PREV
click me!

Recommended Stories

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்... கதறிய தொண்டர்கள்!
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்