
சொத்து குவிப்பு வழக்கில் சசிகாலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.
இதையடுத்து தீர்ப்பு சசிகலாவுக்கு எதிரானதால் அவரால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.இந்நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார்.
எம்.எல்.ஏக்கள் கையொப்பமிட்ட ஆதரவு பட்டியலை ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.
இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் ஓ.பி.எஸ் க்கு ஆளுனரை சந்திக்க 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கபட்டது. நேரம் ஒதுக்கபட்டநிலையில் முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆளுனரை சந்தித்து சுமார் 15 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
அவருடன் மதுசூதனன், மைத்ரேயன், அமைச்சர் பாண்டியராஜன், உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் இத்தகைய சூழ்நிலையில் ஆளுநரின் முக்கிய முடிவு நாளை மாலைக்குள் வெளியாகும் என தெரிகிறது.