ஆளுநருக்கு மறதி – நினைவூட்ட சென்றார் எடப்பாடி...

 
Published : Feb 15, 2017, 08:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஆளுநருக்கு மறதி – நினைவூட்ட சென்றார் எடப்பாடி...

சுருக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகாலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.

இதையடுத்து தீர்ப்பு சசிகலாவுக்கு எதிரானதால் அவரால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.இந்நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார்.

இதையடுத்து எம்.எல்.ஏக்கள் கையொப்பமிட்ட ஆதரவு பட்டியலை ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதுவரை எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைக்கு சசிகலா தரப்பு ஆதாரவு நிர்வாகிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் 100 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆளுநர் அழைக்கும் வரை நாங்கள் இங்கேதான் காத்திருப்போம் என கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது.

பின்னர் அவர் ஆளுனரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ஆளுநர் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பாற்றுவார். எங்களிடம் 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. ஓ.பி.எஸ்ஸிடம் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தான் உள்ளது. எங்களுக்கு சாதகமாக ஆளுநர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு