"உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சுற்று பயணத்தை தொடங்குவேன்" - ஓபிஎஸ் பேட்டி

 
Published : Feb 25, 2017, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
"உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சுற்று பயணத்தை தொடங்குவேன்" - ஓபிஎஸ் பேட்டி

சுருக்கம்

தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி அரசு மீது கடந்த 18 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். 122 எம்எல்ஏக்களை கடத்தி வைத்துக் கொண்டு வாக்களிக்க வைத்து எடப்பாடி வெற்றி பெற்றார்.

இதனையடுத்து ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டதுஎன தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீதிகேட்டு நெடிய பயணம் செல்லவுள்ளதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் சுற்றிவந்து தங்களது நிலையை விளக்குவோம் என்றும், அனைத்து நிர்வாகிகளும் இந்த நீதிகேட்டு செல்லும் பயணத்தில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.

நேற்று ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிலும் பேசிய ஓபிஎஸ் நீதிகேட்டு பயணம் செல்லப் போவதாதக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும்  நீதி கேட்டு பயணம் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!