வீட்டை காலி செய்யும் ஓபிஎஸ்… வேதனை தரும் காரணம் இதுதான்..

Published : Oct 09, 2021, 08:25 PM IST
வீட்டை காலி செய்யும் ஓபிஎஸ்… வேதனை தரும் காரணம் இதுதான்..

சுருக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சென்னை தி நகரில் தற்போது வசிக்கும் வீட்டை காலி செய்ய உள்ளார்.

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சென்னை தி நகரில் தற்போது வசிக்கும் வீட்டை காலி செய்ய உள்ளார்.

சென்னை கிரின்வேய்ஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் தான் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்.  முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளின் காரணமாக அவருக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட்டது.

இப்போது ஆட்சி மாற்றம் காரணமாக அவர் அந்த பங்களாவை காலி செய்யும் நிலைமை வந்தது. அந்த வீட்டை காலி செய்துவிட்டு தி நகரில் உள்ள வீட்டை 4 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்தார். இந்த வீடு வேறு யாருடைதும் அல்ல… பிரபல இயக்குநரின் சங்கரின் வீடாகும்.

நிலைமைகள் இப்படி இருக்க, அவரது மனைவி விஜயலட்சுமி அண்மையில் காலமானார். மனைவி போன நாளில் இருந்து மிகுந்த வேதனையில் இருக்கும் ஓபிஎஸ் தற்போது குடியிருக்கும் தி நகர் வீட்டை காலி செய்ய உள்ளார்.

அதற்கு ஏற்றபடி அவர் தற்காலிகமாக சென்னை அடையாறில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார். அடையாறு பகுதியில் புதிய வீடு வாடகைக்கு பார்க்கும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கின்றனவாம்… விரைவில் வீட்டை பிடித்து வாடகைக்கு போய்விடுவார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..!

 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!