
அதிமுகவின் ஓபிஎஸ் அணி முடிந்து போன முதியயோர் இல்லம் என்றும் இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இனி இணைவதற்கு இனி வாய்ப்பில்லை என்றும், அதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார் இனி இணைப்பும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை என எனவும் ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ஓபிஎஸ் அணி என்பது முடிந்துபோன முதியோர் இல்லம் என்றும், அவர்கள் நினைவாற்றலை இழந்துள்ளதால் இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் புகழேந்தி தெரிவித்தார்.
மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என சவால் விட்ட ஓபிஎஸ் இது வரை அதைச் செய்தாரா என கேள்வி எழுப்பிய புகழேந்தி, அவர் அதிமுகவைவிட்டு பிரிந்து சென்றபோது இருந்த 12 எம்எல்ஏக்களைத் தவிர வேறு யாரும் அவருடன் செல்லவில்லை என தெரிவித்தார்.
தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லை என்பதால் அவங் உளரிக் கொட்டி வருவதாக தெரிவித்தார்.