பாதிப்பு எந்த அளவிற்கு? சேத மதிப்பு எவ்வளவு? தோராய மதிப்பு? பற்றி எறிந்தத மதுரை மீனாட்சி கோயிலில் OPS! பரபரப்பு தகவல்

First Published Feb 5, 2018, 6:44 PM IST
Highlights
OPS explain on madhurai meenatchi amman temple


மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்   மீதான புகாருக்கு யாரையும் குற்ற சொல்ல வேண்டாம் என துணை முதல்வர் ஓ பி எஸ் பேட்டி அளித்துள்ளார்.

 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தீயணைப்பு துறை துரிதமாக செயல்பட்டதால் தீ பரவாமல் தடுக்கப்பட்டதாக கூறினார் .பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பின் வருமாறு பதில் அளித்தார் 

பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது ?

பாதிப்பு குறித்து முழுமையாக சேத மதிப்பீடு கணக்கிடப்பட்டு வருகிறது .சேத மதிப்பு மதிப்பிடப்பட்டு வந்தவுடன் ஆறுமாத காலத்திற்குள் முன்பிருந்த நிலைக்கு ஆகம விதிப்படி ,முன்பிருந்த பாரம்பரிய (ஹெரிடேஜ்) விதிகளின் படி முழுமையாக பாதிக்கப்பட்ட 7000  சதுர அடி சீரமைக்கப்பட்டு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் 

சேத மதிப்பு ?

சேத மதிப்பு முழுமையாக கணக்கிடப்பட்ட பின்பு தெரிய  வரும் 

தோராய மதிப்பு ?

தோராயமாக கணக்கிட்டு சொல்ல இயலாது.

இனிமேல் இதுபோன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க ?

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு ஆலய பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அது பல்வேறு கோணங்களில் பரிசீலனை செய்து ஆய்வு செய்து இது மாதிரியான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் திருக்கோவில்கள் பாதுகாக்கப்படும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் 

கோவிலுக்குள் எங்கும் கடைகள் அதிகம் இல்லாத பட்சத்தில் இங்கு கடைகள் அதிகம் உள்ளது ..கடைகளால் தான் பிரச்சனையா ? கடைகள் அப்புறப்படுத்தப்படுமா ?

கடைகளினால் திருக்கோவிலுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற சூழல் இந்த தீ விபத்து நடைபெற்று இருக்கிறது .அதை அரசு தீவிரமாக பரிசீலித்து கவனமுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .இனிமேல் இதுமாதிரி தீ விபத்துக்கள் ஆலய திருக்கோவில்களில் நடைபெறாத வண்ணம் உரிய வகையிலான பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பக்கதர்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்முடைய பாரம்பரிய சின்னமாக விளங்க கூடிய திருக்கோவில் முழுமையாக பாதுகாக்கப்படும் .கடைகளால் இந்த விபத்து ஏற்படுகிறது என்று சொன்னால் கடைகள் முற்றிலுமாக அகற்றப்படும் .

கோவில் நிர்வாகத்தின் மீது பக்தர்கள் வைக்கும் குற்றசாட்டுகள் குறித்து ?

நான் யார் மீதும் பழி போடுவது இந்த நேரத்தில் சரியாக இருக்காது 

இந்து அமைப்புகள் அறநிலையத்துறை ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என கோரி இருப்பது பற்றி ?

தனிப்பட்ட பாதுகாப்பு  குழு என்று சொல்லும் அவர்களிடமோ ,தனிப்பட்ட துறைகளிடமோ ஆலயங்கள் ஒப்படைப்பது சரியாக வராது என தெரிவித்துக் கொள்கிறேன் .அரசுதான் கோவிலினுடைய முழு பாதுகாப்பை உறுதி செய்கின்ற பொறுப்பு இருக்கிறது 

வரும் காலங்களில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் தீயணைப்பு நிலையம் நிரந்தரமாக அமைக்கப்படுமா ?

நல்ல  கருத்து .   தனியாக தீயணைப்பு நிலையம் உலக பிரசித்தி  பெற்ற கோவில்களில் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் .

கடந்த முறை முதல் அமைச்சராக வந்தீர்கள் தற்போது துணை முதல்வராக உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா ?தர்ம யுத்தம் வெற்றி பெற்றுள்ளதா ?

கோவிலை பற்றி மட்டும் கேளுங்கள் .அரசியல் ரீதியாக வேறு மேடை இருக்கிறது

புது மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் கலை பண்பாட்டு சின்னங்கள் பொதுமக்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைக்கப்பட்டுள்ளதே ?

இந்த தீ விபத்து சிறந்த படிப்பினையை கொடுத்து இருக்கிறது .இதனை முன்னுதாரணமாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்களில்  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இடையூறு இருந்தால் அதனை முழுமையாக அகற்றி நம்முடைய பாரம்பரிய சின்னங்கள் முழுமையாக பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

சி பி ஐ விசாரணை வேண்டும் என ஹெச் ராஜா கேட்டு உள்ளது பற்றி ?

அது தேவையற்ற ஒன்று என நான் கருதுகிறேன் 

விபத்திற்கான காரணம் என்று எதுவும் சொல்லப்பட்டு இருக்கிறதா ?

 முழு விசாரணை தெரிந்த பிறகு முதலில் உங்களுக்கு தான் தெரிவிக்கப்படும் 

எப்போ விசாரணை தொடங்கப்படும் ?யார் அந்த குழுவில் இடம்பெறுவர் ?

அரசின் மூலமாக கூடிய விரைவில் வெளியிடப்படும் 

தீ விபத்தினால் ஆட்சிக்கு ஆபத்து என்ற ஜோதிடர்களின் கருத்து பற்றி ?

நான் ஏற்கனவே மதுரை விமான நிலையத்தில் சொல்லி இருக்கிறேன் .ஜோதிடம் எனக்கு தெரியாது. 

ஊடகத்துறையினரை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன் ?

கோபமில்லாமல் கேளுங்கள் (சிரிப்பு)

பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படும் போது நடத்தப்படும் சோதனை வெளியே கொண்டு வரும் போது சோதனை செய்யப்படுவதில்லை .குறிப்பாக பேட்டரி பொருட்கள்.

அது மாதிரியான குறைபாடுகள் இருப்பது உள்ளே கடைகளுக்கு வாடகை விடுவதன் காரணம் தான் .ஆகவே உள்ளே மற்றும் வெளியே செல்கின்ற பொருட்களுக்கு சோதனை செய்யப்படும் 

பேட்டியின் போது அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,செல்லூர் கே ராஜூ ,கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

click me!