ஓபிஎஸ் இபிஎஸ் 2 கோடி தொண்டர்களை உருவாக்கி உள்ளனர்.. அதிரடி காட்டிய ஆர்.பி உதயகுமார்.

Published : Jan 17, 2022, 03:51 PM ISTUpdated : Jan 17, 2022, 03:58 PM IST
ஓபிஎஸ் இபிஎஸ் 2 கோடி தொண்டர்களை உருவாக்கி உள்ளனர்.. அதிரடி காட்டிய ஆர்.பி உதயகுமார்.

சுருக்கம்

எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 14 லட்சம் தொண்டர்கள் இருந்தனர் அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார்கள். தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்  2 கோடி தொண்டர்களை உருவாக்கியுள்ளனர்  

செல்லி ஜெயலலிதா அவர்கள் அதிமுக தொண்டர்களின் எண்ணிக்கையே ஒன்றரை கோடியாக உயர்த்திய நிலையில் தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அது 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக திட்டங்களை வர்ணம் பூசி திமுக தங்களின் திட்டங்களைபோல அறிவித்து வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு டி. குண்ணத்தூர் அம்மா கோவிலில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் டி குண்ணத்தூரில் உள்ள அம்மா யோகா மணிமண்டப திருக்கோயிலில் உள்ள புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அன்னதானத்தினை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புரட்சித்தலைவரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டகழகத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களில் மற்றும் நகராட்சி பேரூராட்சி வார்டுகளில் ஆங்காங்கே புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செய்யப்பட்டது.

புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமெனறு புரட்சி தலைவி அம்மா இலட்சியமாகக் கொண்டார் அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை நடத்தி  11 ஆயிரம் கோடியில் 6000 மேற்பட்ட திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 14 லட்சம் தொண்டர்கள் இருந்தனர் அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார்கள். தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்  2 கோடி தொண்டர்களை உருவாக்கியுள்ளனர். 

இந்த இயக்கம் தோன்றி 50 வருடங்கள் ஆகியுள்ளன இதில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சி பீடத்திலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாது இன்றைக்கு ஆட்சிக்கு வந்த திமுக எட்டு மாதங்கள் ஆகியும் எந்த திட்டங்களும் நிறைவேற்ற வில்லை ஆனால் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை வர்ணம் பூசி அதை தாங்கள் கூறுவது போல சித்தரித்து வருகின்றனர் இதை எல்லாம் நாங்கள் மக்களிடத்தில் எடுத்துக் கூறுவோம் என்று கூறினார் முன்னதாக அன்னதானத்திற்கு உணவு தயாரிக்கப்பட்டது அதை சமையலில் கலைஞருடன் இணைந்து உணவு தயாரிப்பு வேளையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஈடுபட்டு அசத்தினார்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!