கட்சியையும், சின்னத்தையும் பிடுங்கிவிட்டால் அவர்களின் ஆட்டம் குளோஸ்.. சின்னம்மா போடும் பயங்கர பிளான்.

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2021, 1:15 PM IST
Highlights

பல கஷ்டங்களை நமக்கு கொடுத்தார்கள், அரசாங்கம் மூலமாகவும் கொடுத்தார்கள் அதை அனைத்தையும் மீறி தான் வந்தோம்.அனைத்து கஷ்டத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறோம், அதனால் இதையும் சமாளித்து வரமுடியும். 

அரசாங்கம் மூலமாக வந்த பல கஷ்டங்களை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறேன், இளைஞர்கள் எனக்கு துணை நிற்கிறார்கள், நிச்சயம் இந்த நெருக்கடியில் இருந்தும் மீண்டுவருவேன் என  சசிகலா அதிமுக தொண்டர் ஒருவரிடம் பேசிய ஆடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலின் போது ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். தற்போது மீண்டும் கட்சியை கைப்பற்ற பகிரத முயற்சிகளே மேற்கொண்டுவரும் அவர், தினந்தோறும் அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி அதற்கான ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சசிகலாவுடன் பேசுவோரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இபிஎஸ், ஓபிஎஸ் தீவிரம்காட்டி வருகின்றனர். ஆனாலும் சசிகலாவுடனான தொலைபேசி உரையாடல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோமகி மணியனுடன் சசிகலா தொலைபேசி வாயிலாக பேசியதாவது:- கட்சியை எம்.ஜி. ஆர்.காலத்திற்கு பிறகு அம்மா அவர்கள் எப்படி கொண்டு போனார்களோ அதை போல் நானும் கொண்டு போவேன். இரட்டை இலையும், அதிமுக கட்சியும் அவர்களிடம் இருப்பதால் தான் அவர்கள் செல்வாக்குடன் இருக்கிறார்கள். அது இல்லை என்றால் அவர்கள் ஒன்றும் இல்லை. கட்சிதான் அவர்களுக்கு துணை கொடுக்கிறது. தொண்டர்களின் மனசு படி அனைத்தையும் செய்து காட்டுவேன் என கூறியுள்ளார்.

அதேபோல், சென்னையை சேர்ந்த இளந்தமிழ் ஆர்வலன் என்பவரும் சசிகலா பேசிய ஆடியோவில், அம்மா அவர்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்கு பிறகு மிகவும் கஷ்டபட்டு இந்த காட்சியை கொண்டு வந்தார்கள். இடையில் பிரிந்து பிறகும் ஒன்று சேர்த்தார்கள். தொண்டர்கள் அனைவரும் அம்மா அவர்கள் பக்கம் இருந்தால் அவர்கள் அதை செய்து முடித்தார்கள். 

தற்போது அதேபோல் இரண்டாவது முறை நடந்து வருகிறது. பல கஷ்டங்களை நமக்கு கொடுத்தார்கள், அரசாங்கம் மூலமாகவும் கொடுத்தார்கள் அதை அனைத்தையும் மீறி தான் வந்தோம். அனைத்து கஷ்டத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறோம், அதனால் இதையும் சமாளித்து வரமுடியும். தொண்டர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். தொண்டர்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். எந்த கட்சியிலும் இல்லாத இளைஞர்கள் கூட எனக்காக நிற்கிறார்கள், நீங்கள் வாங்க நாங்க இருக்கிறோம் என்கிறார்கள். தலைவருக்கும், அம்மா அவர்களுக்கும் நான் செய்ய வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!