தமிழக மக்களின் வாழ்வு சிறக்க பணி அமையட்டும்.. அமைச்சர் எல்.முருகனை வாழ்த்திய ஆளுநர் தமிழிசை.

Published : Jul 08, 2021, 12:50 PM IST
தமிழக மக்களின் வாழ்வு சிறக்க பணி அமையட்டும்.. அமைச்சர் எல்.முருகனை வாழ்த்திய ஆளுநர் தமிழிசை.

சுருக்கம்

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார் அதின் விவரம் பின்வருமாறு.

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார் அதின் விவரம் பின்வருமாறு. மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின்படி புதிதாக மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

நம் பாரத திருநாட்டை உலக அரங்கில் பீடு நடைபோடுவதற்கும், நம் தாய் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும், நம் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி. அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

குறிப்பாக தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அருமைச் சகோதரர் எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டிற்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்க அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!