அந்த மாதிரி ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு இல்லை... கோபத்தில் கொந்தளித்த ஓ.பி.எஸ்!

Published : Apr 16, 2019, 06:12 PM IST
அந்த மாதிரி ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு இல்லை...  கோபத்தில் கொந்தளித்த ஓ.பி.எஸ்!

சுருக்கம்

அந்த மாதிரியான ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபத்துடன் கூறியுள்ளார்.

அந்த மாதிரியான ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபத்துடன் கூறியுள்ளார்.

நடக்கவிருக்கும் பாராளுமன்ற தொகுதியில் தமிழகமே திரும்பிப்பார்க்கக்கூடிய தொகுதிகளில் ஒன்றாக  கருதப்படுவது தேனி நாடாளுமன்ற தொகுதியாகும் .  இந்த  தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரும் , அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வனும் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், போட்டியிடுவதால் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. கடைசி நாளான இன்று பிரசாரத்திற்குப் பின்  ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உங்க மகன் போட்டியிடும் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு  பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று  சமூகவலைதளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது என நிருபர்கள் கேட்டபோது, நாங்கள் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. இன்றைய தொழில்நுட்ப உதவியால் என்ன மாதிரியான படத்தையும் தயாரித்து வெளியிட முடியும் என்றார். 

பிறகு பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு, ஒரு பெண்ணோடு உல்லாசமாக இருக்கும்  ஆபாச வீடியோ  வெளியானதில் உங்களுக்கு பங்கிருக்கிறதாக சொல்லப்படுகிறதே? என்று கேட்டபோது டென்ஷானான, ஓபிஎஸ், அது மாதிரியான ஈனப்புத்தியோ, கீழ்த்தரமான புத்தியோ எனக்கு கிடையாது என்று ஓ.பி.எஸ் கோபத்துடன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!