முதல்வர் பழனிச்சாமி, மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Published : Apr 16, 2019, 05:39 PM ISTUpdated : Apr 16, 2019, 05:57 PM IST
முதல்வர் பழனிச்சாமி, மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி அமமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனக்கூறி முதல்வர் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவதூறு வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர், கொடநாடு குறித்து ஸ்டாலின் தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாகவும், அவதூறு வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணை வந்தது. அப்போது கொடநாடு குறித்து பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் பேசக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இந்த தடையை மீறி பேசினால் நீதித்துறையில் தலையிடுவதாக கருதப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!