
சட்டப் பேரவை தொடங்கவுள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி கேட்டுள்ளார்.
இதே போன்று மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை குறித்து விவாதிக்க திமுக சார்பில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.இதனைத் தொடர்ந்து வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் எப்படி நடந்த கொள்வது? இன்று கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது என்ன பேருவத என்பத குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் செம்மலை, சரவணன்,மாணிக்கம், ஆறுக்குட்டி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஓபிஎஸ் விளக்கமளித்தார்.