திமுக சார்பில் தனிநபர் தீர்மானம் - மாட்டிறைச்சி, நீட் தேர்வு குறித்து விவாதம்!!

Asianet News Tamil  
Published : Jun 14, 2017, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
திமுக சார்பில் தனிநபர் தீர்மானம் - மாட்டிறைச்சி, நீட் தேர்வு குறித்து விவாதம்!!

சுருக்கம்

dmk personal resolution in TN assembly

கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூடியது. பின்னர், கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விவாதம் நடைபெறவில்லை. இதனால், எதிர்க்கட்சியினர் பட்ஜெட் குறித் விவாதங்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையில் விவசாயிகள் கடன் பிரச்சனை, மாட்டு இறைச்சி பிரச்சனை என ஏராளமாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழகத்தில் ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜூன் 14ம் தேதி (இன்று) சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவித்தார். இதையொட்டி இன்று சட்டமன்றம் கூடுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது, மத்திய அரசு அறிவித்த மாட்டு இறைச்சி தடை, நீட் தேர்வு, விவசாயிகளுக்கான கடன் பிரச்சனை, மது விலக்கு, வறட்சி நிவாரணம், மாடு மற்றும் ஒட்டகம் வெட்டுவதற்கான தடை உள்ளிட்டவை குறித்து திமுக சார்பில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, இன்று ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் திமுக சார்பில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்களால், இன்று சட்டமன்றத்தில் பெரும் வாதம் நடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?