
தங்களது எழுச்சியை காண்பிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ்சும் தீபாவும், சுற்றுபயணம் கிளம்புகின்றனர்.
அதற்கு முன்பு ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் போட்டியிட்ட ஆர்.கே.நகரில் பிரமாண்ட விழாவை நடத்தி பிரச்சாரத்தை துவங்க உள்ளனர்.
மறுபுறம் ஓ.பி.எஸ், தீபா இருவருக்கும் மக்கள் ஆதரவு இருப்பதை, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு செல்லும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் சட்ட ரீதியான போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஏற்கனவே ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல் மக்களை தேடி பிரச்சார பயணம் மேற்கொள்வதில் இறங்கிவிட்டார்.
இதற்கு முன்னோட்டமாக பிப்.24 அன்று ஜெயலலிதா தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் ஜெ.தீபா பங்கேற்கும் மாபெரும் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது.
இதில் இருவரும் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்டங்களை வழங்குகின்றனர். பின்னர், பிரச்சார பயணத்தை துவக்க உள்ளனர். இதற்கான வாகனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தொகுதிகளின் பட்டியல், ஆகியன தயாராகி வருகிறது.
ஆர்.கே.நகரில் நடைபெறும் இந்த விழாவில் பெரிய அளவில் பொதுமக்கள், தொண்டர்கள், கூடுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.