எடப்பாடியின் எக்குத்தப்பான பேட்டியும் ஓபிஎஸ்சின் தமிழக சுற்றுப்பயணமும்..!!!

 
Published : May 01, 2017, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
எடப்பாடியின் எக்குத்தப்பான பேட்டியும் ஓபிஎஸ்சின் தமிழக சுற்றுப்பயணமும்..!!!

சுருக்கம்

ops campaign all over tamilnadu

முதல் அமைச்சர் எடப்பாடியின் பேட்டி ஒன்றே ஓ.பன்னீர்செல்வத்தின் தமிழக சுற்றுப்பயணத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

எடப்பாடி என்ன சொன்னார்?

சேலத்தில் நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி எடுத்த எடுப்பிலேயே தங்களது அணியில் 122 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறினாராம்.

அதிமுகவில் 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் ஏன் பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூற அதிர்ந்து போனார்களாம் நிர்வாகிகள்.. 

இத்தகவல் ஊடகங்களின்  வாயிலாக பன்னீருக்குத் தெரிய வரும் போது, "எல்லாம் எதிர்பார்த்த ஒன்று தான்" அவங்க (எடப்பாடி) இப்படித் தான் பேசுவாங்க.

இதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாதுனு உடனிருந்தவர்களுக்கு  ஆறுதல் அளித்தாராம்.. இப்படியே இருந்தா எப்படி! நம்ம பலம் என்னனு அவங்களுக்கு புரிய வைக்கிற மாதிரி எதாச்சு ஒன்னு பண்ணியே ஆகனும் என்று மூத்த தலைவர்கள் சீரியஸ் அட்வைஸ் கொடுக்க, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பது என  ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டதாம்...

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!