காட்டிக் கொடுத்த ஓபிஎஸ்; பறிதவித்து போய் நிற்கும் மத்திய அமைச்சர்! தப்புமா பதவி?

First Published Jul 25, 2018, 12:49 PM IST
Highlights
Ops betrayed The federal minister will stand out


ராணுவம் விமானம் பற்றி வெளியில் சொன்னதால் ஓ.பன்னீர்செல்வம் மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் தம்பி பாலமுருகன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர உடல் நலப் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. 

அப்போது ஓபிஎஸ் தம்பியை சென்னை கொண்டுவர ராணுவம் விமானத்தை நிர்மலா சீதாராமன் அனுப்பினார். மதுரையில் இருந்து ஜூலை 2-ம் தேதி ஓபிஎஸ் தம்பி சென்னை கொண்டு வரப்பட்டார். பெங்களூருவில் இருந்து மத்திய அமைச்சர் ராணுவம் விமானம் அனுப்பியதை வெளிப்படுத்தினார். ராணுவ விமானம் அனுப்பியதை சொன்னதால் ஓ.பன்னீர்செல்வம் மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே ஓபிஎஸை நேற்று சந்திக்க மறுத்துள்ளாக கூறப்படுகிறது. 

நிர்மலாவை காட்டிக்கொடுத்தார்

ராணுவம் விமானம் பற்றி வெளியில் சொன்னதால் ஓ.பன்னீர்செல்வம் மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனி ஒருவருக்கு ராணுவ விமானம் அனுப்பிய நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. கேட்பவர்களுக்கு எல்லாம் ராணுவ விமானம் அனுப்ப முடியா என்று பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஓபிஎஸ் தம்பி பாலமுருகன் சுதந்திர போராட்டம தியாகியா? என கேள்வி எழுப்பியுள்ளனர். ராணுவ விமானத்தை தவறாக பயன்படுத்திய நிர்மலா சீதாராமன் பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர். 

பாலமுருகன் யார்?

ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது தம்பியான பாலமுருகன் மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது. இதனால் பாதிக்கப்பட்ட பாலமுருகனுக்கு மதுரை அப்பல்லோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரை இருந்து பாலமுருகனை சென்னை கொண்டுவர ராணுவ விமானம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்தார். பாலமுருகனுக்காக சிறப்பு ஹெலிகாப்டர் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தது பூதாரமாக வெடித்துள்ளது. 

click me!