பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஓபிஎஸ் ஒப்புதல் - கரும்பு விவசாயிகள் போராட்டம் ஒத்தி வைப்பு

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 06:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்  ஓபிஎஸ் ஒப்புதல் -  கரும்பு விவசாயிகள் போராட்டம் ஒத்தி வைப்பு

சுருக்கம்

2 ஆயிரம் கோடி பாக்கியை வழங்க வலியுறுத்தி அக்.25 முதல் கரும்பு விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புகொண்டதை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகை ரூபாய் 2,000 கோடியை உடனடியாக வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு கூட்டுறவு சக்கரை ஆலைகளில் 350 கோடி ரூபாயும், தனியார் சர்க்கரை ஆலைகளில் 1,650 கோடி ரூபாயும் பாக்கி வைத்திருப்பதாக கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறி வருகிறார்கள். 

இந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஆனாலும் வேளாண் துறை அமைச்சரோ, சர்க்கரை துறை ஆணையரோ கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கவோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைகளிடம் உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் குதித்தார்கள்

இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அரசு தரப்பில் அழைப்பு விடுத்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்ப்ட்டுள்ளது.

நாளை  காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் தொழில்துறை அமைச்சம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!