
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம், சசிகலா அவரை ஏதோ செய்துவிட்டார், அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்படும்போதே ஜெயலலிதாவுக்கு உயிரில்லை, போயஸ்கார்டனிலேயே ஜெ., மரணமடைந்துவிட்டாரா... என்றெல்லாம் பன்னீர் - பழனி டீம் குற்றம்சாட்டிக் கொண்டிருந்த நிலையில், வெற்றிவேல் இன்று வெளியிட்ட 20 நொடி வீடியோ தமிழக அரசியலை தலைகீழ் புரட்டியுள்ளது.
சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் ஜெயலலிதாவின் ‘பேஷண்ட் நிலை’ வீடியோ வெளியாகியுள்ளது.
முழங்கால் வரை ஏறிய நைட்டி, வலது தோள்பட்டை வெளியே தெரியும் வண்ணம், மூக்கை மூட வேண்டிய மாஸ்க் கழுத்தில் தொங்க, இடது கையில் ஜூஸ் கிளாஸை பிடித்து மெது மெதுவாக அதை சிப் செய்து குடிக்கும் கவலை தோய்ந்த ஜெ.,யின் வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனின் வெற்றி வாய்ப்பை உச்சமாக்கு எனும் எண்ணத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
ஆனால் வெளியிட்டிருக்கும் வெற்றிவேலோ ‘இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை’ என்கிறார். ’அப்பல்லோ ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்த பின் நார்மல் ரூமுக்கு மாற்றப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட அம்மாவின் வீடியோ இது.’ என்கிறார்