ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு: அதிமுகவுடன் விசிக வெளிநடப்பு.. அதிர்ச்சியில் ஸ்டாலின்.. ஆடிப்போன ஆளுநர் ஆர்.என் ரவி

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2022, 10:39 AM IST
Highlights

அதைத்தொடர்ந்து  சரியாக காலை 10 மணிக்கு சட்டமன்றம் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அப்போது தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வு ரத்து செய்யும் மசோதாவை ஆளுநர் இன்னும் பரிசீலிக்காமலும், 

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.இது முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அதிமுகவும் ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில்  நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.  ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டப்பேரவை கூடும் பொது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்தி வருகிறார். இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து  சரியாக காலை 10 மணிக்கு சட்டமன்றம் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அப்போது தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் தேர்வு ரத்து செய்யும் மசோதாவை ஆளுநர் இன்னும் பரிசீலிக்காமலும்,  அதை இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ள நிலையில் ஆளுநர் சட்டப்பேரவையை அவமதிக்கிறார் என்றும், அப்படிப்பட்ட ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றுவது சரிதானா என முழக்கம் எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதேபோல் கொரோனா  காலத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என கூறி, ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அதாவது விடுதலை சிறுத்தைகள் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதா கிடப்பில் வைத்துள்ள ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளது.  விடுதலை சிறுத்தைகளின் இந்நடவடிக்கை திமுகவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!