பாஜகவுக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள்.. சோனியா காந்தி அதிரடி வியூகம்.. பரபரக்கும் டெல்லி.!

By Asianet TamilFirst Published Aug 19, 2021, 10:03 PM IST
Highlights

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க டெல்லியில் காட்சிகள் அரங்கேறிவரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார். 
 

மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு எதிராகவும் 2024-இல் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பொதுவான கூட்டணியை அமைப்பது குறித்து அண்மைக் காலமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் தொடர்ந்து பேசிவருகிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இதில், மத்தியில் உள்ள பாஜகவுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, அதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றுவிடாமல் ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.


இந்தக் காணொலி கூட்டத்தில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெகாசஸ் விவகாரம், மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

click me!