ஹெச்.ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - தஞ்சையில் ஒன்று சேர்ந்த எதிர்கட்சிகள்...!

 
Published : Mar 06, 2018, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஹெச்.ராஜாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - தஞ்சையில் ஒன்று சேர்ந்த எதிர்கட்சிகள்...!

சுருக்கம்

opposition parties against to h.raja in tanjore

தஞ்சை பழைய பேருந்து அருகே உள்ள பெரியார் சிலைக்கு முன்பு எச்.ராஜா உருவபொம்மையை எரித்து திமுக, தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.

இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தஞ்சை பழைய பேருந்து அருகே உள்ள பெரியார் சிலைக்கு முன்பு எச்.ராஜா உருவபொம்மையை எரித்து திமுக, தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!