BREAKING மாணவர்களுக்கு குஷியான செய்தி... பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது..!

Published : Nov 12, 2020, 09:22 AM ISTUpdated : Nov 12, 2020, 09:38 AM IST
BREAKING மாணவர்களுக்கு குஷியான செய்தி... பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது..!

சுருக்கம்

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து, அக்டோபர் மாத இறுதியில் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நவம்பர் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்திருந்தனர். இதனிடையே, இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் 16ல் பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்