ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த ஆப்பு - டெல்லியில் நசீம் ஜைதியுடன் சந்திப்பு

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 09:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த ஆப்பு - டெல்லியில் நசீம் ஜைதியுடன் சந்திப்பு

சுருக்கம்

Zaidi naicim meeting in Delhi

ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்திக்கிறார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும், ஒருவருக்கொருவரை எப்படி காலி செய்வது என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.


கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்தது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையம், ஜனாதிபதி ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அந்த மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், சசிகலாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.


அதற்கு சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டது.. ஆனால், அந்த பதில் சரிவர ஏற்புடையதாக இல்லை என கூறப்பட்டது. இதனால், மீண்டும் பதில் மனுவை சசிகலா அனுப்பி வைத்தார்.
இதற்கிடையில், ஆர்கே நகர் தொகுதிக்கான இடை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், போட்டியிடுவதற்கு இரட்டை இலை சின்னம் தேவை என ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.


இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதீயை சந்திக்க உள்ளனர்.
அப்போது, அதிமுகவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருந்தால், மட்டுமே கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு தேர்வு செய்ய முடியும். அதிலும் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.
தற்போது அதிமுக அவை தலைவர் தங்களுடன் இருக்கிறார். ஜெயலலிதா, மறைந்தவுடன், சசிகலாவை நியமித்தது செல்லாது.


பொது செயலாளர் பதவிக்கு முறைப்படி தேர்தல் அறிவிக்க வேண்டும். அதில், வேட்புமனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருந்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். இல்லாவிட்டால், ஒருமனதாக பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம்.
இதேவிதிமுறைகளின் படியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பொதுச்செயலாளராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருபோதும் இதனை அவர்கள் மாற்றியது இல்லை.
சட்டதிட்ட விதியில் இதனை யாராலும் எக்காலத்திலும் மாற்றமுடியாது. ஆனால் ஜெயலலிதா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி மீண்டும் சேர்த்து 5 ஆண்டுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. எனவே அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது நிச்சயமாக செல்லாது’ என முறையிட உள்ளார்.


மேலும், தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பே கட்சியில் கிடையாது. அந்த வகையில் பொதுக்குழு கூடி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது கட்சி சட்டவிதிகளில் இல்லை. எனவே அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது.
பொதுச்செயலாளருக்கு அடுத்ததாக உள்ள அவைத்தலைவர், பொருளாளர் ஆகியோர் தங்கள் அணியில் உள்ளனர். எனவே, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.
குறிப்பாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும். அவர்கள் சார்பில் கொடுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கான மனுவை தேர்தல் கமி‌ஷன் ஏற்கக்கூடாது என முறையிட உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Thirumavalavan Speech: “தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக...” - மாநாட்டில் திருமாவளவன் சூளுரை.! மெய்மறந்து கேட்ட சிறுத்தைகள்.!
திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?