மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள்.. அண்ணாமலை ஒன்றும் இல்லை.. பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Apr 3, 2023, 11:01 AM IST

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். கூட்டணியில் இருக்கிறோம் என அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணி உறுதி செய்யவில்லையென கூறினார். 


அதிமுக பாஜக கூட்டணி பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து, அதிமுக பாஜகவுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் உள்ளது. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனையடுத்து, தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரபல தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்ததாக செய்திகள் வெளியாகின. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்திருந்தார். ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் பேட்டியளித்த போது;- அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். கூட்டணியில் இருக்கிறோம் என அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணி உறுதி செய்யவில்லையென கூறினார். அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, கூட்டணி குறித்து நான் என்ன கூறினேனோ, அதேதான் அமித்ஷாவும் தெரிவித்தார். பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது என்றார். 

மேலும், நான் பணம் இல்லாத தூய்மையான அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இது 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என்பது எனது கருத்து. பின்னடைவு ஏற்பட்டாலும் பின்வாங்க மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக பாஜக கூட்டணி பற்றி அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுதொடர்பாக சேலத்தில் செய்ததியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி;- மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறியுள்ளனர். மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை என்றார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

click me!