ஃபர்ஸ்ட் நைட்ல இது வந்தால்தான் வெர்ஜினா.? இவன் யாரு நம்மள தள்ளிவைக்க.. ஆவேச சின்மயி..

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2021, 9:41 AM IST
Highlights

இனிமேல் தீட்டி என்று பெண்களை யாராவது சொன்னால், இந்த காலத்து பெண்கள் அதை பொருட்படுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ள சின்மயி, அதேபோல முதலிரவின்போது சில அறிகுறிகள் தென்படாவிட்டால் இந்த பெண் வெர்ஜின் இல்லை என்று கூறும்  கட்டுக்கதைகளும் இருக்கிறது. 

மீடூ புகார் சர்ச்சை எழுந்தபோது கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பகீர் கிளப்பியவர் பாடகி சின்மயி. அது தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை, தாக்குதல்களுக்கு எதிராக ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப்  போன்ற சமூக வலைதளங்களில் மூலம் பேசி கருத்து பதிவிட்டு வருகிறார். சில நேரங்களில் அவரது கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது, பல நேரங்களில் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல பெண்கள் வெளியில் பேசத் தயங்கும்  மாதவிடாய் சுழற்சி குறித்தும், அதனால் பெண்கள் சொந்த குடும்பத்தினராலேயே தீட்டு என கூறி தள்ளி வைக்கப்படுவதாகவும், அதை கண்டித்தும் மிகவும் ஓபனாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தொடர்ந்து பேசியுள்ள அவர், பல ஆண்டுகளாக பெண் சமூகம் மாதவிடாயை காரணம்காட்டி தீட்டு பட்டதாககூறி ஒதுக்கி வைக்கப்படுகிறது. பீரியட்ஸ் ஆகும்போது பெண்களை இங்கே நிற்காதே, அங்கே நிற்காதே, இதன் மீது உட்காராதே, அதன் மீது உட்காராதே என்று பல வகைகளில் கட்டுப்படுத்தப்படுகின்றனர். இது ஒருவகையான தீண்டாமை தான், இது பல ஆண்டுகலாக இருந்து வருகிறது. எத்தனையோ விஷயங்களில் நான் மாறினாலும் மாதவிடாய் விஷயத்தில் மாறவே இல்லை. அதை ஒரு காரணமக கூறி பெண்களை ஒதுக்கும் அவலம் இன்னும் உள்ளது. இதற்கு காரணம் மாதவிடாய் குறித்த  போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

மாதவிடாய் எதற்காக ஏற்படுகிறது, எப்படி நடக்கிறது என்பதை பற்றி விழிப்புணர்வு தேவை, எட்டாம் வகுப்பு பாடத்தில் இது குறித்து முழுமையாக படித்திருப்போம், மொத்தத்தில் செ*** எஜிக்கேஷன் என்பது மிகவும் அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் காரணம் காட்டி பெண்களை ஒதுக்குபவர்களிடத்தில், ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதற்கு இதுவரையில் எந்த அறிவியல் பூர்வமாக காரணங்களும் இல்லை. அப்படியெனில் இது சுத்த மூடநம்பிக்கையே அன்றி வேறென்ன. இது தீண்டு என்பதற்கு அவர்களிடத்தில் எந்த மருத்துவ ஆராய்ச்சி காரணங்களும் இல்லை. ஆனால் காலம் காலமாக இதை சொல்லி பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்.

இனிமேல் தீட்டி என்று பெண்களை யாராவது சொன்னால், இந்த காலத்து பெண்கள் அதை பொருட்படுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ள சின்மயி, அதேபோல முதலிரவின்போது சில அறிகுறிகள் தென்படாவிட்டால் இந்த பெண் வெர்ஜின் இல்லை என்று கூறும்  கட்டுக்கதைகளும் இருக்கிறது. முதலில் இது குறித்த விழிப்புணர்வு தேவை. ஒரு பெண் வெர்ஜினா இல்லையா என்று கூறுவதற்கெல்லாம் எந்த வரையறையும் இல்லை. ஆனால் இவர்கள் கூறும் கட்டுக்கதைகள் எல்லாம் சகிக்க முடியவில்லை.

கன்னித்தன்மைகான எந்த வரையறையும் இல்லை, முதலிரவுக்கு வரும் வரை பெண்ணுறுப்பில் ஒரு சிறிய திசு சேதம் ஆகாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி இருந்தால் தான் வெர்ஜினாம்.. இதெல்லாம் யார் சொன்னது.  நான் கேட்கிறேன் முதலிரவில் இரத்தம் வந்தால் தான் வெர்ஜினிட்டியா. நான் கேட்கிறேன் மொத்தத்தில்  நம்மை தள்ளி வைப்பதற்கு இவர்கள் யார் என அவர் ஆவேசமாக பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் அவரை பாராட்டியும், இப்போ என்ன ஆச்சு சின்மயிக்கு ஏன் இந்த டாப்பிக் என கேள்வி எழப்பி வருகின்றனர். 

 

click me!