கே.டி.ராகவனின் ஆபாச காணொலியை வெளியிட்ட மதனின் சேனல் முடக்கம்.. யூடியூப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

Published : Aug 26, 2021, 08:14 AM IST
கே.டி.ராகவனின் ஆபாச காணொலியை வெளியிட்ட மதனின் சேனல் முடக்கம்.. யூடியூப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

சுருக்கம்

பாஜக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலியை வெளியிட்ட மதனின் சேனலை யூடியூப் நிர்வாகம் நீக்கியிருக்கிறது.   

பாஜக பொதுச்செயலராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. இந்த வீடியோவை பாஜகவில் அண்மையில் இணைந்தவரும் ஊட்கத்தில் பணியாற்றியவருமான மதன் ரவிச்சந்திரன், தன்னுடைய ‘மதன் டைரி’ என்ற யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியானதையடுத்து தன்னுடைய கட்சி பணியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இந்தக் குற்றச்சாட்டையும் மறுத்திருந்தார். 
இந்த வீடியோவில் மதன் பேசும்போது, கே.டி.ராகவனைப் போல தன்னிடம் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 தலைவர்களின் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். வரும் டிசம்பர் வரை அந்த வீடியோவை ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே பாஜகவிலிருந்து மதனை நீக்கி அக்கட்சி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், அந்த காணொலியை வெளியிட்ட சேனலை யூடியூப் நிர்வாகம் நீக்கி இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் வெவ்வேறு சேனல்களில் இந்தக் காணொலியின் பிரதிகள் தொடர்ந்து யூடியூபில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!