Online Rummy: ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jan 6, 2022, 1:04 PM IST
Highlights

கடந்த அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

கடந்த அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இதனால் பலரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி லட்சக்கணக்கில் பணம், நகை ஆகியவற்றை இழந்து வருகின்றனர். அவர்களில் பலர் பெருமளவில் கடனுக்கும் ஆளாகியுள்ளனர். இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில்;-  எதிர்க்கட்சியைச் உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்தைப் பற்றி இங்கே எடுத்துச் சொன்னார்கள். இதுகுறித்து தொடர்ந்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில் சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 3-6-2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது. ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசளை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக் கோரி இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது. 

வழக்கைப் பொறுத்தவரைக்கும். விசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உறுதியளிக்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

click me!