ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை ! தமிழக அரசு அதிரடி ! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Sep 25, 2019, 7:32 PM IST
Highlights

கூட்டுறவு கடைகளில் ஆந்திர வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 33 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்த வந்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் பெருமளவு பாதிப்படைந்தது. மேலும் ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் நீரில் மூழகி வீணாயின. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசு பொது மக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் வெங்காயம் விலை உயர்ந்ததை தொடர்ந்து சென்னையில் காமதேனு மற்றும் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தேனாம்பேட்டை காமதேனு அங்காடிக்கு சென்று வெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு கடைகளில் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க உத்தரவிட்டதாக குறிப்பிட்டார்.

மத்திய தொகுப்பில் இருந்து 56 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை தந்து விட்டனர். இன்னும் 36 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் வர வேண்டும். அதை வாங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

ஆந்திரா வெங்காயத்தை நாங்கள் ரூ.33-க்கு விற்பனை செய்கிறோம். இதை 3 நாட்களுக்குத்தான் வைத்திருக்க முடியும். இந்த வெங்காயம் எண்ணெய் அதிகம் குடிக்கும். அதனால் தான் இந்த வெங்காயத்துக்கு பதில் மகாராஷ்டிரா வெங்காயத்தை பலர் வாங்குகிறார்கள்.

click me!