மேலும் ஒரு மாதகாலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு..!! பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2020, 2:08 PM IST
Highlights

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலோ,  தொழிற்சாலைகளை இயக்கினாலோ அல்லது பொதுப் போக்குவரத்து  இங்ங்கினாலோ கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும் எனவே ஊரடங்கு தளர்த்தப் கூடாது , மேலும் ஒரு மாத காலத்திற்கு  ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். 

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையாததால் ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .  குறிப்பாக ஒரிசா, மேகாலயா உள்ளிட்ட  மாநிலங்கள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில் மற்ற மாநில அரசுகளும் அக்கருத்தை ஆதரித்ததாக தெரிகிறது . இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது தீவிரமாகி வருகிறது , இதுவரை  27,892 பேருக்கு இந்தியாவில் கொரொனா தெற்று அதிகரித்துள்ளது.

 

சுமார் 872 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்றும் உயிரிழப்புகள் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.   முன்னதாக வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது . இந்நிலையில் வரும் மே 3ம் தேதியுடன் இரண்டாவது ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ளது .  அதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், இதுவரை வைரசை இந்தியாவில் கட்டுப்படுத்த முடியவில்லை.  இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது சில நிபர்ந்தனைகளுடன் தளர்த்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .  அதுமட்டுமில்லாமல் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக கோடிக்கணக்கான மக்கள் ஊரடங்கு தடை உத்தரவால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர் .  கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் கூலித்தொழிலாளர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என மக்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்து  வறுமையில் சிக்கித் தவித்து வருகின்றனர். 

இன்னும் பல லட்சம் குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு என்பது கனவாகவே மாறியுள்ளது ,  கொரோனா  வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விட பசி பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது .  இந்நிலையில் மேலும் ஊரடங்கு  நீட்டித்தால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கக்கூடும் என நிலையும் நாட்டில் உருவாகி இருக்கிறது ,  அதுமட்டுமின்றி ஏற்கனவே அதலபாதாளத்தில் சரிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரம் முற்றிலுமாக விழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது  எனவே இந்த இக்கட்டான நிலையில் என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல்  மத்திய அரசு திகைத்து வருகிறது,  இந்நிலையில்  இன்று மாநில முதலமைச்சர்களுடன்  உடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி ஊரடங்கு தளர்த்துவது தொடர்பாக உரையாடினார் ,  அப்போது பெரும்பாலான முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் இதுவரை வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இல்லை,   எனவே ஊரடங்கை தளர்த்துவது கூடாது என எச்சரித்துள்ளதுடன், 

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலோ,  தொழிற்சாலைகளை இயக்கினாலோ அல்லது பொதுப் போக்குவரத்து  இங்ங்கினாலோ கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும் எனவே ஊரடங்கு தளர்த்தப் கூடாது , மேலும் ஒரு மாத காலத்திற்கு  ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.  குறிப்பாக ஒரிசா மாநில முதலமைச்சரும் மற்றும் மேகாலயா மாநில முதலமைச்சருமான கன்ராட் ஷங்மா ஆகியோர் இன்னும் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .  இந்நிலையில் அவர்களது கோரிக்கைக்கு மற்ற மாநில முதல்வர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை,  ஊரடங்கை நீட்டிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்,   இதனால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .  ஆனால் ஒரு மாத காலம் நீட்டிக்க படாவிட்டாலும் கூட மே 15 ஆம் தேதி வரையிலாவது ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!