ஒத்த ஆளா ரவுண்டு கட்டிட்டாரு ராகுல் பய்யா... மெய்சிலிர்க்கும் குஷ்பு..! குதறி எடுக்கும் நெட்டிசன்ஸ்..!

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஒத்த ஆளா ரவுண்டு கட்டிட்டாரு ராகுல் பய்யா... மெய்சிலிர்க்கும் குஷ்பு..! குதறி எடுக்கும் நெட்டிசன்ஸ்..!

சுருக்கம்

One man against the entire army of BJP that is how the BJP saw the Gujarat Election says khushboo

குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகத் துவங்கின. அது முதல், குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக., முன்னிலை பெற்று வந்தது. இடையில் குஜராத்தில் மட்டும் நீயா நானா போட்டியுடன் காங்கிரஸும் சரிக்குச் சரியாக முன்னிலை பெற்று வந்தது. 

இந்நிலையில், காலை 9.30 மணி அளவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு, இந்த நிலவரத்தை தாம் பெரிதும் ரசிப்பதாக டிவிட்டரில் பதிவு செய்தார். 

அவர் தனது டிவிட்டரில் மேலும் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதற்கு பின்னூட்டங்களும் ரவுண்டு கட்டின. 

ஒரே ஒரு ஆள், ஒன் மேன் ஆர்மியாக இருந்து, தனக்கு எதிராக செயல்பட்ட அத்தனை பாஜக.,காரர்களையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டார். அப்படித்தான் பாஜக.,வினர் இந்த குஜராத் தேர்தலை பார்க்கிறார்கள். காங்கிரஸ் அவர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தந்திருக்கிறது. நடு இரவுகளில் பயமுறுத்தியிருக்கிறது. அவர்களை நாங்கள் அப்படி எழ வைத்திருக்கிறோம். நல்லாத்தான் போகுது...  - என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். 

 

அதாவது நீங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்... காங்கிரஸில் வேறு யாரும்  தலைவர்களே இல்லை என்று! வேறு தலைவர்களே உருவாகாத கட்சி உங்களுக்கு எதற்கு? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஒருவர். 

நாங்கள் சொல்கிறோம்... ஒரு குடும்பத்துக்கு எதிராக ஒத்தக்கட்டை நபர்.. ஒரே ஒரு நபர். ஒட்டுமொத்த ஊழலுக்கு எதிராக ஒத்தை சுத்த மனிதர்.. என்று ஒருவர் கூறியிருக்கிறார். 

இப்படி இன்று டிவிட்டர் பதிவுகளுக்கும் காரசார விவாதங்களுக்கும் பஞ்சமில்லைதான்! 

PREV
click me!

Recommended Stories

இரு மதங்களின் போட்டியாக மாறும் மேற்கு வங்க அரசியல்..! இஸ்லாமிய நபரால் மம்தாவுக்கு திடீர் செக்..!
மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்.. திமுக அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கார்த்தி சிதம்பரம்!