மீண்டும் ஒர் சுர்ஜித்தா..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன்.!! மீட்பு பணிகள் தீவிரம்.!

By T BalamurukanFirst Published May 28, 2020, 8:14 AM IST
Highlights

கடந்த ஆண்டு தமிழகத்தில் "சுர்ஜித்" என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் பலியான  சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாகாணத்தை சேர்ந்த கோவர்தன் என்பவரின் மூன்று வயது மகன் சாய்வர்தன். இந்த சிறுவன் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து அந்த சிறுவனை மீட்க போராடி வருகின்றனர்.

முதல்கட்டமாக சிறுவன் விழுந்த ஆழ்துளைக்குள் ஆக்சிஜன் செலுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் பக்கவாட்டில் ஒரு பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சி நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
click me!