வேலியில் போற ஓணான்... பாஜக அண்ணாமலைக்கு பயந்து நழுவிய அன்பில் மகேஷ்..!

Published : Sep 19, 2020, 02:26 PM IST
வேலியில் போற ஓணான்... பாஜக அண்ணாமலைக்கு பயந்து நழுவிய அன்பில் மகேஷ்..!

சுருக்கம்

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? என்ற கேள்விக்கு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நழுவல் பதில் அளித்தார்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? என்ற கேள்விக்கு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி நழுவல் பதில் அளித்தார்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’கடந்த 5 நாட்களில் ஆன்லைன் மூலம் பலர் திமுகவில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் விருப்பம். ஆனால், தலைவர் முடிவு செய்வார். கூட்டணிக் கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதியாக உள்ளன. கூட்டணியும் உறுதியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நண்பராக நான் விரும்புகிறேன்’’எனத் தெரிவித்தார். 

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலையுடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘’வேலியில் போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் ஏன் விட வேண்டும்? என்று நழுவினார்.  மக்களுடன் தொடர்பு கொள்ளும் நவீன தொழில்நுட்பங்களில் அதீத ஆர்வம் காட்டுவதில் கருணாநிதி வழியில் ஸ்டாலின் நடைபோடுகிறார். இளைஞர்கள் ஆர்வமுடன் திமுகவில் சேர்ந்து வருகின்றனர்’’ என அவர் த் எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!