திருட்டு தனமாக மதுரை டூ சென்னைக்கு ஆம்னி பஸ்..! கண்ணைக்கட்டும் கட்டணம். கதிகலங்கும் பயணிகள்.!

By T BalamurukanFirst Published Sep 11, 2020, 11:23 PM IST
Highlights

மதுரையில் இருந்து அரசு விரைவு பேருந்துகள் இயக்கினாலும் தனியார் ஆம்னி பஸ் எம்ஆர்டி நெல்பேட்டை ஹோட்டலுக்கு முன்பு பயணிகளை சென்னைக்கு வரிசை கட்டி தனிமனித இடைவெளியின்றி ஆடுமாடுகளை போல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நபர் சென்னை செல்ல ரூ700 வரைக்கும் டிக்கெட் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டுதல் படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்று கோயில்கள் மால் போக்குவரத்து என அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் கோயில்கள் மால்கள் பார்கள் பொதுபோக்குவரத்து என அனைத்தும் திறந்து விடப்பட்டது. அரசு விரைவு பேருந்து முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் இயக்க அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. 

மதுரையில் இருந்து சென்னைக்கு செல்வோர் எண்ணிக்கை சாதாரண நாட்களிலேயே கூடுதலாக இருக்கும். கொரோனா காலத்தில் பஸ்கள் கிடைக்காமல் கூட்டம் அலைமோதுகிறது. மதுரையில் இருந்து அரசு விரைவு பேருந்துகள் இயக்கினாலும் தனியார் ஆம்னி பஸ் எம்ஆர்டி நெல்பேட்டை ஹோட்டலுக்கு முன்பு பயணிகளை சென்னைக்கு வரிசை கட்டி தனிமனித இடைவெளியின்றி ஆடுமாடுகளை போல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நபர் சென்னை செல்ல ரூ700 வரைக்கும் டிக்கெட் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

கூட்டம் தவிர்க்க வேண்டும் தனிமனித இடைவெளி இருக்க வேண்டும் மக்கள் உயிர்தான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்லும் தமிழக அரசு ஆம்னி பஸ் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். அதன் மர்மம் என்வென்று தெரியிவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் இதுபோன்ற பஸ்கள் விசயத்தில் கடுமைகாட்ட வேண்டும்.
கொரோனா கொடூரம் இன்னும் அடங்காத நேரத்தில் அரசும் அதன் அதிகாரிகளும் பொதுமக்களும் அலட்சியமாக நடந்துகொண்டால் கொரோனா தொற்று அதிகமாகிக்கொண்டே தான் செல்லும்.

click me!