ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ப்ரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முக்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்பட்டுள்ளளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கியது. ஜம்மு, லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தற்போது அங்கு பல முன்னேற்ற ஏற்பாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணைய சேவை படிப்படியாக வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
அந்த புகைப்படத்தில் நீண்ட வெள்ளை தாடியுடன் கூடிய தோற்றத்தில் உள்ளார். உமர் அப்துல்லா எப்போதும் முழுமையாக சேவ் செய்த தோற்றத்தில் இருப்பவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் தற்போது நீண்ட வெள்ளை தாடியுடன் உள்ளார்.