
கடந்த திங்கள் கிழமை சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி. தனது தனிப்பட்ட இரு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, மூன்றாவது நிகழ்ச்சியாக, திமுக., தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்கு திடீர் ஏற்பாடு செய்து கொண்டு வந்து சந்தித்தார்.
அப்போது அவர், திமுக, தலைவர் கருணாநிதியுடன் அமர்ந்து ஹவ் ஆர் யு என்று கேட்டு, பேசினார். அவருக்கு பதில்தர கருணாநிதி முயற்சி செய்தார். தொடர்ந்து, கருணாநிதி குடும்பத்தாரிடம் மோடி பேசிக் கொண்டிருந்தார். மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோருடன் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேல் பேசினார். அப்போது, அவர் கருணாநிதிக்கு ஓர் அழைப்பும் விடுத்தார்.
அதாவது, கருணாநிதியை, தில்லியில் தனது இல்லத்துக்கு வந்து தங்கி சிகிச்சை எடுத்து ஓய்வு எடுக்கலாம் என்று அழைத்தாராம். மோடியின் இந்த அழைப்பு அப்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தில்லியில் காற்று மாசு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கைந்து நாட்களாகவே, பனிமூட்டமும், காற்று மாசும் கலந்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பலருக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல் எல்லாம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மக்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப் பட்டது. சாலைகளில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டன. ஒருவழிச் சாலையிலும், எதிரே சாலை கண்ணில் படாததால், முன்னே சென்ற வாகனங்களில் மோதி நின்றன.
இத்தகைய குழப்ப நிலையில் தில்லி இன்று ஆன நிலையில், நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா..? மோடியின் மனித நேய அழைப்பை இப்படி கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர் இணைய தளங்களில்...
ஓ... இதுக்குத்தான் தில்லிக்கு வாங்கன்னு கருணாநிதியை அழைத்தாரா மோடி..?
தில்லியில் உச்ச பட்ச காற்று மாசு, நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் கடும் பாதிப்பு - செய்தி 1
கருணாநிதியை தில்லியில் வந்து தங்குமாறு அழைத்தார் பிரதமர் மோடி - செய்தி 2