அடகடவுளே.. அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் பொளந்துகட்டபோகுதாம்.. தமிழக மக்களுக்கு பகீர் எச்சரிக்கை.

Published : Sep 24, 2021, 02:29 PM IST
அடகடவுளே.. அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் பொளந்துகட்டபோகுதாம்.. தமிழக மக்களுக்கு பகீர் எச்சரிக்கை.

சுருக்கம்

வங்கக் கடல் பகுதிகள் 24.09.2021 முதல் 26.09.2021 வரை: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 24.09.2021,25.09.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழை பெய்யக்கூடும். என்றும் சென்னை வாடிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 26.09.2021 முதல் 28.09.2021 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

குறிப்பு:  இன்று (24.09.2021) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது  அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  வலுபெறக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

வங்க கடல் பகுதிகள் : 24.09.2021 முதல் 26.09.2021 வரை: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும். 27.09.2021, 28.09.2021:பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதிகள்: 27.09.2021, 28.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில்  கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!