போயஸ் கார்டனில் அள்ளிச் சென்றதை வைத்து அதிகாரிகள் ஆய்வு

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
போயஸ் கார்டனில் அள்ளிச் சென்றதை வைத்து அதிகாரிகள் ஆய்வு

சுருக்கம்

officials investigate things recovered from jayalalithas poes garden house

வெள்ளிக்கிழமை நேற்று போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து லேப்டாப்கள், பென் டிரைவ், சில கடிதங்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா வசித்த இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதை விமர்சித்து அதிமுகவினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தினகரன், திவாகரன் உள்ளிட்ட பலரும், ஜெயலலிதாவின் இல்லம் ஒரு கோயில் என்று கூறி, அதன் புனிதத்தைக் கெடுத்து விட்டதாக கருத்துகளைத் தெரிவித்தனர்.  

இந்நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை குறித்து தூத்துக்குடிக்கு வந்திருந்த  டிடிவி தினகரன், கருத்து தெரிவித்த போது, அவர்கள் தேடியது கிடைத்திருக்காது
 என்றார். 

இதனிடையே, ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அதுமட்டுமல்லாமல், சசிகலா குடும்பத்தினர் நடத்திய 20 போலி நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்குகள் குறித்தும் வருமான வரித்துறை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதற்காகத்தான், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள், முக்கியப் பிரமுகர்களின் கடிதங்கள் உள்ளிட்ட கடிதப் போக்குவரத்து, ஆவணங்கள் பரிமாற்றம் அது குறித்த தகவல்கள் என பரிசோதிப்பதற்காக லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட  பலவற்றையும் அள்ளிச் சென்று இப்போது ஆய்வு செய்து வருகின்றனராம். 

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்