நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது... ரஜினிக்கு ஆதரவாக கோதாவில் இறங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி..? அதிர்ச்சியில் திமுக..!

Published : Feb 02, 2020, 10:48 AM IST
நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது... ரஜினிக்கு ஆதரவாக கோதாவில் இறங்கிய அஞ்சாநெஞ்சன் அழகிரி..? அதிர்ச்சியில் திமுக..!

சுருக்கம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது ரஜினிகாந்தின் தர்பார் படம். சூப்பர் ஸ்டார் படம் என்றால் எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதே போல, தர்பார் படமும் நல்ல வசூலை ஈட்டும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் தர்பார் படம் வெளியானது. இப்படம், லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்தது. படம் ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு வசூல் அள்ளுகிறது என்று தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கொண்டாடப்பட்டு வந்தது.

ரஜினிகாந்திடம் நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போட்டுள்ள டுவீட் தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது ரஜினிகாந்தின் தர்பார் படம். சூப்பர் ஸ்டார் படம் என்றால் எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அதே போல, தர்பார் படமும் நல்ல வசூலை ஈட்டும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் தர்பார் படம் வெளியானது. இப்படம், லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்தது. படம் ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு வசூல் அள்ளுகிறது என்று தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கொண்டாடப்பட்டு வந்தாலும், போக போக எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாம். 

எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்காததால் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் சிலர் ரஜினியிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில், ரஜினியில்  இமேஜை காலி செய்ய திமுக இதுபோல மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவாக அவரது நெருங்கிய நண்பரான மு.க.அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது தமிழக அரசியல் கலத்தை புரட்டி போட்டுள்ளது. அவரது டுவிட்டர் பதிவில்;- நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது! #DarbarWWBlockbuster என சிவாஜி பட ஸ்டைலில் ஒரே வரியில் தனது நண்பனை காசு கேட்டு மிரட்டும் நபர்களை அதகளமாக்கி இருக்கிறார். 

 

மற்றொரு பதிவில் நண்பர் ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுத்த திக பிரமுகர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற மிரட்டல்களை இனி ‘மன்னிக்க’ முடியாது என்று பதிவிட்டுள்ளார். எவ்வளவு நாட்களாக சைலன்டாக இருந்த மு.க.அழகிரி, ரஜினி ஆதரவாக களமிறங்கியுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு நாட்கள் முன்னர் தனது ஆதரவாளர் திருமண விழாவில் நானும் கலைஞர் பிள்ளை தான். எப்போது நிலைமை மாறப்போகிறது என்று தெரியவில்லை. அப்போது தெரியும். நான் எதையும் செய்ய கூடியவன். நினைத்ததை முடிப்பவன் என்று மு.க.அழகிரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி