இந்தியா செய்யும் நல்ல காரியத்தை பாகிஸ்தான் பாராட்டுமா..? திமுக தலைவர் ஸ்டாலினிடமும் மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பை எதிர்ப்பார்க்க முடியாது..! தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாடல்..!

By Manikandan S R SFirst Published Feb 2, 2020, 1:23 AM IST
Highlights

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறு நடைபெற்றிருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார்.. எடுத்து வருகிறார்! தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி. உதயகுமார் மதுரையில் பேட்டி .

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள பல்வேறு புதிய தொழில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து, மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்,

எல்லோரும் வரவேற்க கூடிய நிதி நிலை அறிக்கையை, மதுரையில் பிறந்த மத்திய நிதி அமைச்சர், மதுரைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியா செய்யும் நல்ல காரியத்திற்கு பாகிஸ்தானிடம் பாராட்டை எதிர்பார்க்க முடியாது. அது போல தி மு க தலைவர் ஸ்டாலினிடம் மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பை எதிர்பார்க்க முடியாது.

திமுக ஆட்சிக் காலத்தில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு நடந்திருந்தால் மறைத்திருப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி ஆட்சியில், டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு நடைபெற்று இருக்கிறதா? என்பது குறித்து தூய்மையான வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருகிறது.

வளர்ச்சி, வேலைவாய்ப்பை, விவசாயத்தை அடிப்படையாக கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாள் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியமான நாள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் பேட்டி அளித்தார்.

Hameedhu Kalanthar

click me!