திடீர் ட்விஸ்ட்... இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சியமாக சேர்ப்பு... அதிர்ச்சியில் அதிமுகவினர்

By vinoth kumar  |  First Published May 27, 2023, 10:18 AM IST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார் என்று தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார் என்று தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Latest Videos

இந்த வழக்கு விசாரித்த சேலம் நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும், விரிவான விசாரணை நடத்தி  மே மாதம் 26ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் மத்திய குற்றப்பரிவு போலீசார் எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கையில் ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் பேர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்த காரணத்தினால் அவரும் அந்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். அந்த அடிப்படையில் ஓபிஎஸ்ஐ சாட்சியாக சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

click me!