அதிமுகவில் சர்வாதிகார போக்கு...! "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" - ஓபிஎஸ்

Published : Jun 22, 2022, 08:56 AM ISTUpdated : Jun 22, 2022, 09:19 AM IST
அதிமுகவில் சர்வாதிகார போக்கு...! "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" - ஓபிஎஸ்

சுருக்கம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் சர்வாதிகார போக்கு நிலவுவதாக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.  

இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என இரண்டாக பிளவு பட்டுள்ளது. நாளுக்கு நாள் இபிஎஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது 7 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். தன்னுடன் இருந்த ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் அனைத்தும் தலை கீழாக மாறியுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓபிஎஸ் உள்ளார். இந்திநிலையில், சென்னை மெரினா கடற்கரை அம்மா நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக கோஷமிட்டு அதிமுகவின் பொதுச்செயலர் பதவிக்கு இபிஎஸ்   தகுதியானவர் அல்ல என்றும் ஓபிஎஸ் தான் தகுதியானவர் என்றும் அம்மாவை நிரந்தர பொதுச் செயலாளர் என்ற முழக்கத்தோடு அதிமுகவின் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடம் வருகை தந்தனர்.

அதிமுகவில் சர்வாதிகாரம் ?

மகளிரணி தொண்டர்கள் ஜெயலலிதாவின் சமாதியிலிருந்து மலர்களை தூவி ஒப்பாரி  பாடலை பாடினார். உடன் வந்த ஒருவர் திடீரென பெட்ரோல் உடல் மேல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

 

 

அதில்,  மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது இபிஎஸ் அணி வெற்றி பெறலாம் ஆனால் கண்டிப்பாக ஒருநாள் நாம் வெற்றி பெறுவோம் என்பதை குறிக்கும் வகையில் தான் இந்த டுவிட்டர் பதிவு அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 7ஆக சரிவு.! நள்ளிரவில் இபிஎஸ் அணிக்கு பல்டி அடித்த நிர்வாகிகள்

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!