NVN சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி மாநிலங்களவை வேட்பாளராக அறிவிப்பு.. மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்.!

Published : Sep 14, 2021, 02:00 PM IST
NVN சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி மாநிலங்களவை வேட்பாளராக அறிவிப்பு.. மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்.!

சுருக்கம்

வட சென்னை மாநிலங்களவை தொகுதியில் திமுக சார்பில் 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் எம்.பியாக இருந்தவர் சோமு. மறைந்த திமுக தலைவர் என்.வி. நடராஜனின் மகன். நடராஜன் மத்திய அமைச்சராக இருந்தவர்.

மறைந்த முன்னாள் திமுக எம்.பி. NVN சோமுவின் மகள் டாக்டர் NVN.கனிமொழி திமுகவில் மாநிலங்களவை வேட்பாளராக  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வட சென்னை மாநிலங்களவை தொகுதியில் திமுக சார்பில் 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் எம்.பியாக இருந்தவர் சோமு. மறைந்த திமுக தலைவர் என்.வி. நடராஜனின் மகன். நடராஜன் மத்திய அமைச்சராக இருந்தவர். சோமுவின் மகள்தான் டாக்டர் கனிமொழி. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்  கனிமொழி படித்தவர். தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  மாதவரம் தொகுதியிலும், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தியாகராயநகர் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

இந்நிலையில், காலியாக உள்ள 2 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் KRN.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 3வது தலைமுறை திமுககாரர் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இந்த திமுகவை நம்பாதீங்க..! மக்களை நம்ப வைச்சு ஏமாற்றுவதுதான் அவங்க வேலையே..! விஜய் எச்சரிக்கை..!
12 நிமிடத்தில் உரையை முடித்த விஜய்.. அப்செட்டான தொண்டர்கள்..!