உயிருக்கு பயப்படல... ஆனால், கட்சி ஆரம்பிச்சி எனக்கு ஏதாவது ஆகிட்டா..? சக்கைப்போடு போடும் ரஜினி கடிதம்..?

By Thiraviaraj RMFirst Published Oct 29, 2020, 11:22 AM IST
Highlights

மூன்றாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மாறுவதை மின்மினிகள் தடுத்திடுமா? ’அந்தக் கடிதம்’உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சிகள் தேவை இல்லை. 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயதசமி அன்று கட்சி பற்றிய அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பாத்தவர்களுக்கு ஏமாற்றமே  மிஞ்சியது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்காதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னமும் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பது அவரது தொண்டர்களை வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில் ரஜினி ’’எனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா உள்ள நிலையில் கட்சி தொடங்குதல், பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது எனக்கு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் என்னால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. நான் என்னுடைய உயிருக்காக பயப்படவில்லை. கட்சி தொடங்கி சில நாட்களிலேயே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் அது கட்சி பணியை பாதிக்கும் என்பதாலேயே அமைதி காக்கிறேன்’’ எனக் கூறியதாக வாட்ஸ் அப்பில் வெளியாகி இருக்கிறது.

 

மூன்றாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மாறுவதை மின்மினிகள் தடுத்திடுமா? ’அந்தக் கடிதம்’உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சிகள் தேவை இல்லை. நாம் நம் வழியில் தொடர்ந்து செல்வோம். நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும். மக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். 

click me!