தமிழக பாஜக அல்ல " தமிழக திராவிட பாஜகா" .. பிராமணர்களுக்கு எதிராக எல்.முருகன்.. அந்தணர் முன்னேற்ற சங்கம் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2021, 9:46 AM IST
Highlights

ஆகம விதிகளுக்கு எதிராக ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை பூஜைமுறைகளை சிதைக்கும் நோக்கத்தோடு அர்ச்சகர் நியமனத்தையும், 
பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்ச்சியையும் வரவேற்றுள்ளனர்.திக நாத்திக கூட்டத்திற்க்கு துனைபோகும் இவர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது.

ஆகமவிதிகளுக்கு எதிராக, ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கை, பூஜைமுறைகளை சிதைக்கும் நோக்கத்தோடு திமுக அரசு  முன்னெடுக்கும் உத்தரவுகளை ஆதரித்து பேட்டி கொடுத்துள்ள, தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பாஜக தேசிய மகளிரணி செயலாளர் திருமதி வானதி சீனீவாசன் ஆகியோருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக  அந்தணர் முன்னேற்ற கழகம் அகில பாரதிய பிராம்மணர் மஹாசங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: 

தமிழக பாஜக (தமிழக திராவிட பாஜகா) பிராம்மணர்களுக்கு எதிராக திரும்புவதை உணருங்கள் பிராம்மணர்களே. பாஜக தேசிய மகளிரணி செயலாளர் திருமதி வானதி சீனீவாசன் MLA அவர்களும், தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் அவர்களும், ஆகமவிதிக்ளுக்கு எதிராக, நீதிமன்றதீர்ப்பிற்க்கு எதிராக, அறநிலையத்துறை கட்டுபபாட்டில் உள்ள திருக்கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மகளிருக்கு அர்ச்சகர் பயிற்ச்சி என்கிற திமுகவின் செயலை வரவேற்ப்பதாக தொலைகாட்சி பத்திரிக்கைகளில் பேட்டிகொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக, பிராம்மணர் கட்சி என்கிற  இல்லாத ஒன்றை கூறிவரும் திராவிட கூட்டத்தின் கூற்றை பொய்பிக்கவேண்டும் என்பதற்க்காக, அரசியலுக்காக,திராவிட இயக்கங்கள் பகுத்தறிவுகூட்டங்களின் இந்துவிரோத போக்கிற்க்கு துனைபோகும்விதமாக ஆயிரகணக்கான ஆண்டுகளாக பின்பற்றபடும் ஆகம விதிகளுக்கு எதிராக ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை பூஜைமுறைகளை சிதைக்கும் நோக்கத்தோடு அர்ச்சகர் நியமனத்தையும், பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்ச்சியையும் வரவேற்றுள்ளனர். திக நார்த்திக கூட்டத்திற்க்கு துனைபோகும் இவர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!