பாஜகவுடன் இணைந்து செயல்பட முடியாது !! அமைச்சரின் அதிரடி பேச்சு !!

Selvanayagam P   | others
Published : Jan 09, 2020, 08:10 AM IST
பாஜகவுடன் இணைந்து செயல்பட முடியாது !! அமைச்சரின் அதிரடி பேச்சு !!

சுருக்கம்

பாஜகவின் கொள்கைகள் வேறு, எங்களது கட்சி கொள்கைகள் வேறு என்பதால் அவர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என அமைச்சர் ஜெயகுமார் அதிரயாக தெரிவித்தார்.  

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவாக பாஜக விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. 

அந்த வகையில் சென்னையில் கடந்த 7ஆம் தேதி சிஏஏவுக்கு ஆதரவாகப் பேரணி நடைபெற்றது. அதில் பாஜக தேசிய துணைத் தலைவர் ஜெய் பாண்டா, தமிழக பாஜக மூத்த தலைவர்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பாஜகவினர் கலந்துகொண்டனர்.

சிஏஏவுக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையயில் ஆதரவு தெரிவித்திருந்தது.
சென்னையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்தது. ஆனால்  அதிமுக, பாமக ஆகிய முக்கியக் கூட்டணிக் கட்சிகள் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “கூட்டணி இருந்தாலும் கொள்கை மாறுபாடுகள் உள்ளன. சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரின் நலனைப் பாதுகாக்கும் வகையில்தான் அதிமுகவின் கொள்கை உள்ளது. கூட்டணி வேறு, கொள்கைகள் என்பது வேறு. 

கொள்கை எனும்போது எங்களின் கொள்கைகளில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மற்றவர்களின் கொள்கைக்கு நாங்கள் ஒத்துப்போவது கிடையாது” என்று  அதிரடியாக தெரிவித்தார். இது பாஜக நிர்வாகிகளை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!