பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை பார்த்தா? பயணிகளுக்குமா? அண்ணாமலையை விடாமல் வச்சு செய்யும் காயத்ரி ரகுராம்.!

By vinoth kumarFirst Published Jan 18, 2023, 12:23 PM IST
Highlights

மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கைபார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம்.

பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

தமிழக பாஜகவில் கலை கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து, அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனையடுத்து, காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து, நாள்தோறும் அண்ணாமலை விமர்சித்தும், சவால் விட்டும் பதிவுகளை காயத்ரி ரகுராம் செய்து வருகிறார். 

இந்நிலையில், நடிகர் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- யார் செய்த சேட்டை ? எங்க ________ செய்த சேட்டை நினைவிருக்கிறதா? இது தேசிய குற்றம். பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவர்கள் சட்டபூர்வமாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் செல்வாக்கு அவர்களை காப்பாற்றியது.

நேபாள விமான விபத்துக்குப் பிறகு இண்டிகோ விமான நிறுவனங்கள் கருணை காட்டாமல் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பறக்கத் தயாரான பயணிகள் விமானத்தை பெரும் ஆபத்தில் தள்ளிய காரியத்தை சாதாரண குடிமகன் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு 2 வருடம் வரை சிறை சட்டப்படி தண்டனை உண்டு. கர்நாடக வளர்ப்பு மகன் சென்னை திருச்சி விமானத்தில் சென்ற 100 பயணிகள் உயிரையும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார். 

மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டார் என்பது எப்படிச் சரி? சட்டப்படி 1 மன்னிப்பு கடிதத்தை வாங்க நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நிகழ்வு அடிப்படையில் புகார் கொடுத்து உரிய நபரை மாநில காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வளர்ப்பு மகன் விளையாட்டு வேடிக்கைபார்ப்பது வாரிசு அரசியலின் அலங்கோல முகம்.

 

அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள்.

— Gayathri Raguramm 🇮🇳🚩 (@Gayatri_Raguram)

 

அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைத்தேன்.. இனி பயணிகளுக்கு கூட பாதுகாப்பில்லை போலிருக்கிறது. எச்சரிக்கை காரியகர்த்தாக்கள் என பதிவிட்டுள்ளார். 

click me!